ஜார்ஜ் பொலிட்சர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரச்சாரகர்களில் ஒருவர். அவரது சொற்பொழிவுகளுக்குத் தயாரித்து வைத்திருந்த குறிப்புகளிலிருந்து இந்த நூல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
1. தத்துவத்தை நாம் ஏன் பயில வேண்டும்?
எல்லாவற்றிற்கும் முதலும் மூலமும் பொருளே என்று பறைசாற்றும் தத்துவம் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. நடைமுறையுடன் தத்துவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு விஷயத்தை அல்லது தத்துவத்தை நடைமுறையில், வாழ்க்கை அனுபவத்தில் வெளியிடச் செய்யும் செய்கையை நடைமுறை என்கிறோம். தத்துவம் என்பது நடைமுறையில் நாம் மெய்ப்பித்துச் சாதிக்க விரும்புபவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவு ஆகும்.
தத்துவம் இல்லாமல் செயல்படுவது முன்னேற்றத்தை தராது, செயல்பாடு இல்லாத தத்துவம் நடைமுறையில் வெற்றி பெற முடியாத ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடுகிறது.
புரட்சிக்குரிய பணிகளைச் செய்து கொண்டு போக ஒரு சரியான ஆய்வு முறை தேவைப்படுகிறது. வறட்டுத் தத்துவமும் சூத்திரமும் தேவையில்லை.
2. தத்துவத்தைப் பயில்வது கடினமா?
கடினம்தான், ஆனால் முடியாத ஒன்று இல்லை.
3. தத்துவம் என்றால் என்ன?
இந்த உலகம் எங்கிருந்து வந்தது, நாம் எங்கே போகிறோம், என்ற உலகத்தின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்க முயல்வதுதான் தத்துவஞானியின் பணி. இயற்கையை உலகத்தை விளக்க விரும்புவது தத்துவம் எனப்படுகிறது. எல்லா விஷயங்களிலும் பொதிந்திருக்கிற பொதுவான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவு கூறுவது தத்துவம்.
மார்க்சீய தத்துவம் எல்லா பிரச்சனைகளுக்கும் விடையளிக்கிறது, அந்த விடைக்கு வேராக விளங்குவது இயக்கவியல் பொருள்முதல்வாதமே.
4. பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
பொருள் முதல்வாதி என்றால் 'பொருள் ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துபவன், உயர்ந்த லட்சியங்கள், குறிக்கோள்கள் இல்லாதவன்' என்று பொருள் கிடையாது.
தத்துவத்தின் வரலாற்றைப் பார்ப்போம். ஆதி மனிதன் இயற்கைக்கும் உலகத்துக்கும் விளக்கம் தருவதற்கு வெற்றி பெற முடியவில்லை. இயற்கையை ஆராய்ச்சி செய்வதற்கான முறைகள் இல்லாததால் அறியாமையின் காரணமாக மதங்கள், கடவுள்கள் தோற்றுவிக்கப்பட்டன. நூற்றாண்டுகள் செல்லச் செல்ல அறிவியல் வளர்ச்சி பெறப் பெற உலகை விளக்குவதற்கு தேவைப்படும் கடவுள்/மதத்தின் மீது நம்பிக்கை அளவு குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் மூலமாக உலகை விளக்குவதுதான் பொருள்முதல்வாதம்.
வரலாற்றில், பொருள்முதல்வாதம் சிறிது சிறிதாக கடவுள்/மதம் என்ற கருத்துக்களின் தேவையைக் குறைத்துக் கொண்டே வருவதற்கு பெரும் போராட்டங்கள் நடந்தன. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மதவாதிகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துதான் நிலைபெற முடிந்தது (பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, அணுவைப் பிளக்க முடியும், அண்ட பெருவெடிப்பு கோட்பாடு). இப்படி 19ஆம் நூற்றாண்டு வரை நீண்ட தத்துவ போராட்டத்தில்தான் மார்க்சும் எங்கெல்சும் தலையிட்டு 19ம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
இயற்கை அறிவியலிலிருந்து பெறப்பட்ட அந்த கோட்பாட்டை மனித சமூக, வரலாற்று, பொருளாதார மாற்றங்களுக்கும் பொருத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்கள்.
5. மார்கஸீயத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் என்ன தொடர்பு?
பொருள்முதல்வாதமே மார்க்சீயத்தின் அடிப்படை.
மனித அறிவு வளர வளர அறிவியலும் விரிந்து செல்கிறது. மார்க்சியம் என்பது அறிவியல் ஆய்வு அணுகுமுறையை சமூக, வரலாற்று, பொருளாதார அறிவியல்களிலும் பயன்படுத்துவதே ஆகும். இயற்கை அறிவியலின் முன்னேற்றத்தை ஒட்டி மார்க்சியமும் முன்னேறிச் செல்கிறது.
சமூக,வரலாற்று, பொருளாதார துறைகளில் அறிவியல் ஆய்வுமுறையை புறக்கணித்ததால்தான் பெரு அளவிலான குழப்பங்கள், அழிவுகள், துன்பங்களை மனித சமூகம் சந்தித்து வருகிறது. வயிற்று வலிக்கு அம்மனுக்கு நேர்ந்து கொள்வது என்பது கருத்து முதல்வாத அணுகுமுறை. வயிற்றை பரிசோதித்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது பொருள்முதல்வாத அறிவியல் அணுகுமுறை.
அதே போல பொருளாதார விதிகளை கருத்து முதல்வாத அடிப்படையில் அணுவதன் மூலம் திட்டமான முடிவுகளைப் பெற முடியாமல் பொருளாதார ஊசல்களில் மாட்டிக் கொள்கிறோம்.
வர்க்கப் போராட்டத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. 1. பொருளாதாரப் போராட்டம் 2. அரசியல் போராட்டம் 3. தத்துவ அறிவுப் போராட்டம்.
தத்துவ அறிவுப் போராட்டம் உண்மையான சுதந்திர வாழ்க்கையை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கான போராட்டம்.
அரசியல் போராட்டம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மக்கள் குழுக்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டம்.
பொருளாதாரப் போராட்டம் என்பது சோற்றுக்காக, வாழ்க்கை தேவைகளுக்காக போராடுவது.
தத்துவப் போராட்டத்தில் நம் முன் வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் நாம் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது.
கடவுள் உண்டா இல்லையா, ஆன்மா என்ற அழிவில்லாத சக்தி இருப்பது உண்மையா, இந்த உலகம் எப்படித் தோன்றியது, உலகம் எப்போது அழியும் இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிப்பதற்கான ஆய்வு முறை நமக்குத் தேவைப்படுகிறது.
6. மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவத்தின் பிரச்சாரம்.
மார்க்சியத்தைப் பற்றி மௌனம் சாதிப்பது அல்லது அரைகுறை உண்மைகளை தமக்கு சாதகமாக இருக்கும் படி கூறுவது முதலாளித்துவ அமைப்பின் மிகப்பெரும் ஆயுதமாக இருக்கிறது. தத்துவம் பயிலும் மாணவர்கள், பொருளாதாரம் படிக்கும் ஆய்வாளர்கள் யாரும் மார்க்சியத்தையும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே முனைவர் பட்டம் வரை பெற்றுக் கொள்ள முடியும் படி கல்வி நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இயற்கை அறிவியல் பாடங்களில் பயன்படுத்தும் ஆய்வு முறைகளை பொருளாதாரத்திலும், தத்துவப் படிப்பிலும் ஒதுக்கி விட்டு குழப்பமான தியரிகளையே முன்வைக்கிறார்கள். இதனால் மாணவர்கள், மக்கள் மார்க்சியம் அளித்த விஞ்ஞானப் பார்வையின் பலனைப் பெறாமலேயே வைக்கப்படுகிறார்கள்.
7. தத்துவஞானத்தை எப்படிக் கற்கத் தொடங்குவது?
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. பொருள்முதல்வாதம், இயக்கவியல். இந்த இரண்டுமே தனித்தனி வரலாறுகளை கடந்து வந்திருக்கின்றன. முதலில் பொருள்முதல்வாதம் பற்றி பார்க்கலாம்.
உலகத்தை விளக்குவதற்கு இரண்டு அணுகுமுறைகள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான தத்துவவழிகளை இந்த இரண்டு பிரிவுகளில் ஒன்றில் வகைசேர்த்து விடலாம். முதலாவது அணுகுமுறை அறிவியல் பூர்வமானது, மற்றது அறிவியல்பூர்வமற்றது.
8. நாம் ஐம்புலன்களால் உணரும் பருப்பொருட்கள் ஒரு பக்கம், நமது சிந்தனையில் தோன்றும் எண்ணங்கள் இன்னொரு பக்கம்.

0 comments:
Post a Comment