தல போல வருமா என்று பாட்டுடன் முடிந்த படத்தை வடபழனி கமலா திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் நல்ல விஷயங்கள்:
1. கமலா திரையரங்கை புதுப்பித்து அழுக்கில்லாமல் பளபளப்பாக ஐந்து நட்சத்திர தரத்தில் செய்திருக்கிறார்கள்.
2. திரையரங்கின் முன்பு கூட்டம் அதிகமாக இல்லை. இணையத்தில் முன்பதிவு செய்து விட்டு கணினி முன் உட்கார்ந்திருக்கும் ஊழியரிடம் சீட்டு வாங்கிக் கொள்ளலாம்.
3. பெரிய திரை, திரை முழுவதும் அகலமாக படம்.
4. பாரிஸ் (பிரான்சின் தலைநகரம்), மும்பை என்று சொல்லப்படும் நகரம் என்று பணக்காரத்தனமாக கண்ணுக்கு இதமான காட்சிகள்.
5. உயர் தரத்தில் பணம் பண்ணுகிறவர்கள் எப்படி polished ஆக கொலை, கொள்ளை செய்து கொள்கிறார்கள் என்று உறுத்தாமல் பார்க்க முடிகிறது.
6. கோரமான அடிதடிகள், ரத்தச் சிதறல்கள் இல்லாமலேயே பதட்டப்பட வைத்து விடும் சில காட்சிகள்.
வேறு என்ன?:
பள பள காகிதத்தில் பொதியப்பட்ட Bull shit இந்தத் திரைப்படம்.
7 comments:
Bull Shit - nuu neenga eppadi ayya sollalaam, ungalai sonna accept pannuveeengala.......
kasta pattu padam eduthaaa ipdi sollurathukkunnu ungalamathiri sila per iruuka than seiranga
//kasta pattu padam eduthaaa ipdi sollurathukkunnu ungalamathiri sila per iruuka than seiranga//
r u the producer for the film?
ella padathukkum intha mathiri vimarsanam varathan seyuthu.
Appo ellam enga poyirunthinga???
ராஜேஷ்,
அசல் படத்துக்கு இணையத்திலேயே நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. அவற்றில் என்னுடையது ஒன்று என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதால் எதுவும் பெரிதாக மாறி விடப் போவதில்லை. என்னுடைய குரலையும் சேர்த்து வைக்கிறேன் அவ்வளவுதான்.
வானதி,
நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
தல, அசல் எல்லாம் புரட்டிப் போட்ட படைப்பா? நல்ல நூல்கள், படைப்புகள் பற்றி மட்டும் எழுதலாமே? உங்கள் நேரத்தில் இன்னும் பயனுள்ளதாக நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.
ரவி,
மேசையில் பதவல்களை தள்ளினால்தானே நல்ல தாள்களுக்கு இடம் கிடைக்கிறது! நல்லவற்றை பாராட்டி, அல்லவற்றை குறை சொன்னால் நல்லவை பெருக வாய்ப்பு ஏற்படும்.
இல்லை என்றால், சந்தைப்படுத்தலில் நம்மை எல்லாம் மூளைச் சலவை செய்யும் நிறுவனங்கள் கொடுக்கும் படைப்புகள்தான் கதி என்ற நிலைமை ஏற்பட்டு விடும்.
அன்புடன்,
மா சிவகுமார்
அசல் எல்லாம் எதுக்கு இந்த தளத்தில்?!
//அசல் எல்லாம் எதுக்கு இந்த தளத்தில்?!//
தேவையில்லைதான் என்று ரவியும் சொல்கிறார். இனிமேல் தவிர்த்து விடுகிறேன். வேறு பதிவுகளில் எழுதிக் கொள்ளலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment